இத மட்டும் நான் பண்ணவே மாட்டேன்… மாரிமுத்து மறைவுக்கு பிறகு அவரின் மனைவி எடுத்த திடீர் முடிவு.. என்ன காரணம்..?? - Cinefeeds
Connect with us

CINEMA

இத மட்டும் நான் பண்ணவே மாட்டேன்… மாரிமுத்து மறைவுக்கு பிறகு அவரின் மனைவி எடுத்த திடீர் முடிவு.. என்ன காரணம்..??

Published

on

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் இவர் உயிரிழந்த நிலையில் இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாரிமுத்துவின் மறைவால் அவரின் குடும்பத்தினர் மனமுடைந்து இருக்கும் நிலையில் பலரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போது தன்னுடைய மனைவி மீதுள்ள காதலை பல பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது கணவன் இறந்த பிறகு மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி புதிய முடிவை எடுத்துள்ளார்.

அதாவது மாரிமுத்துவின் மனைவி தாலியை கடைசிவரை கழட்டவே கூடாது என்ற முடிவில் உள்ளார். தன்னுடைய கணவரின் நினைவாக எப்போதும் தாலியை அணிந்திருக்க போவதாகவும் அது தன்னிடம் இருந்தால் தன்னுடைய கணவர் தன்னுடன் இருக்கும் ஒரு உணர்வு இருப்பதாக மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி கூறியுள்ளார். அவரின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.