LATEST NEWS
சண்டையை மறந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவை நேரில் சந்தித்த விஜய்.. வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் தனது அப்பாவிடம் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்தார்.
அதே சமயம் பட விழாவில் விஜய் அவருடைய அப்பாவை கண்டு கொள்ளாமல் சென்றது விமர்சனத்திற்கு உள்ளானது. வாரிசு திரைப்படத்தில் அப்பா சென்டிமென்ட் பேசிய நடிகர் விஜய் நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருந்த விஜய் நேற்று இந்தியா திரும்பிய நிலையில் நேராகச் சென்று தன்னுடைய அப்பாவை சந்தித்தேன் நலம் விசாரித்துள்ளார். அப்போது அப்பா மற்றும் அம்மா இருவருடன் விஜய் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.