LATEST NEWS
“தயவுசெஞ்சு இதைக் குடிக்காதீங்க..! ஸ்லிம் ஆக ஆசைப்பட்டு ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்த மக்கள்… ஆபத்தான சீனா டிரெண்ட் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை..!!”
சீனாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் எடைக் குறைப்பு பானம் ஒன்று, அதனைப் பயன்படுத்திய பலரைக் கடுமையான உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ‘விரைவில் எடையைக் குறைக்கலாம்’ என்ற போலி நம்பிக்கையில் இணையத்தில் டிரெண்டான இந்த பானத்தை அருந்திய பலருக்கு அடுத்தடுத்து கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பானத்தைக் குடித்தவர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் எடையைக் குறைப்பதாகக் கூறி பரப்பப்படும் இந்த பானம், உடலின் செரிமான அமைப்பைப் கடுமையாகப் பாதித்து, பலரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இதையடுத்து, மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் இந்த ஆபத்தான பானத்தை யாரும் முயற்சித்துப் பார்க்க வேண்டாம் என்று தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற குறுக்கு வழிகள் மற்றும் இணையத்தில் பரவும் பக்கவிளைவுகள் நிறைந்த பானங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும், சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மட்டுமே எடையைக் குறைக்க பாதுகாப்பான வழி என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
