பனிக்கட்டியில் ஆட்டம் போட்ட அமீர் – பாவ்னி…. எங்கே தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பனிக்கட்டியில் ஆட்டம் போட்ட அமீர் – பாவ்னி…. எங்கே தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

Published

on

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இருவரும் தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்று உள்ளனர். ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள இவர்கள் பனிக்கட்டியில் ஆட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in