தன் மகனுடன் பீச்சுக்கு சென்று… பீச்சை சுத்தம் செய்த பிரபல நடிகர்… நல்ல முயற்சி… வைரலாகும் புகைப்படங்கள்…  – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன் மகனுடன் பீச்சுக்கு சென்று… பீச்சை சுத்தம் செய்த பிரபல நடிகர்… நல்ல முயற்சி… வைரலாகும் புகைப்படங்கள்… 

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

Advertisement

குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய்.

இவர் நடிப்பில்  வெளிவந்த  ‘சினம்’, ‘அச்சம் என்பது இல்லையே’ போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

தற்பொழுது நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்திலிருந்து சமீபத்தில் நடிகர் சூர்யா விலகியதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் அருண் விஜய்.

Advertisement

இவர் தற்பொழுது தனது மகனுடன் காலையில் பீச்சுக்கு சென்று பீச்சை சுத்தம் செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in