150 கோடியில் பிரம்மாண்டமாக வீடு கட்டிய நடிகர் தனுஷ்…. வைரலாகும் வீட்டின் உள்புற புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

150 கோடியில் பிரம்மாண்டமாக வீடு கட்டிய நடிகர் தனுஷ்…. வைரலாகும் வீட்டின் உள்புற புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்திதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இவருக்கு உலக அளவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்தார்.

Advertisement

சுமார் 150 கோடி மதிப்பில் மிக பிரம்மாண்டமாக அவர் கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த வீட்டின் வெளிப்புற புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது.

ஆனால் உட்புறத்தில் எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்ததில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்த புதிய வீட்டிற்கு முன்பு குடியிருந்த அவருடைய பழைய வீட்டின் உட்புற புகைப்படங்கள் சில இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in