பெற்றோர் சிலையை வீட்டில் வைத்திருக்கும் நடிகர் ரஜினி…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெற்றோர் சிலையை வீட்டில் வைத்திருக்கும் நடிகர் ரஜினி…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு முகாமிட்டு ரஜினி பல்வேறு காட்சிகளில் நடித்து வருகிறார்.

Advertisement

இதனை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடிக்கிறார். அந்த படத்தில் கேமியோ ரோல் என்பதால் ஏழு நாட்கள் மட்டுமே கால் சூட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி ராமோஜிராவ் மற்றும் ராமாபாய் எனும் தம்பதிக்கு பிறந்தவர் என்பதை பலரும் அறிந்திருப்போம். ரஜினி தனது அம்மா அப்பாவின் உறவு சிலை ஒன்றை தனது வீட்டில் வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in