லண்டன் சென்ற போது பிரபல நடிகருக்கு நடந்த சோகம்… செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்…!! - Cinefeeds
Connect with us

CINEMA

லண்டன் சென்ற போது பிரபல நடிகருக்கு நடந்த சோகம்… செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் பப்பூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆண்டனி என்ற மலையாள திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். குறைந்த அளவு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த  நிலையில் ஆண்டனி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் லண்டன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 15,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது. அதே சமயம் அவரது பாஸ்போர்ட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. படக்குழுவினருடன் லண்டனில் ஷாப்பிங் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரின் பாஸ்போர்ட் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தலையிட்டு காணாமல் போன பாஸ்போர்ட்டுக்கு பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் படக்குழுவினருடன் இந்திய திரும்பியுள்ளார். பிரபல நடிகரிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.