ஒரு வருடமாக குறையாத வலி.. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும் பூஜா ஹெக்டே… ரசிகர்கள் ஷாக்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

ஒரு வருடமாக குறையாத வலி.. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும் பூஜா ஹெக்டே… ரசிகர்கள் ஷாக்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் பூஜா கிட்ட ஹீரோயினியாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் போது அவருக்கு கால் வலி ஏற்பட்ட நிலையில் கடந்த வருடம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருந்தாலும் வலி குறையாத காரணத்தால் மீண்டும் இவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.