LATEST NEWS
முதல் முறையாக சொந்த ஊருக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி.. பெற்றோர் நினைவிடத்தில் அண்ணனுடன் மரியாதை.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டார் என்று அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் சுமார் 525 கோடி வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்றார்.
அங்கு ஆன்மீகப் பயணத்தை முடித்த பிறகு உத்திரபிரதேச மாநிலம் சென்ற அவர் முதன் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்தார். அதன் பிறகு அயோத்தி ராமர் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சிறப்பு பூஜை செய்தார். பிறகு பெங்களூருக்கு திடீரென்று சென்ற ரஜினி அங்கு ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் பணிமனைக்கு சென்றார்.
தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களுடன் உற்சாகமாக உரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் நடிகர் ரஜினி முதல் முறையாக தன்னுடைய பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபட்டார். ரஜினி தன்னுடைய சொந்த ஊருக்கு வந்ததால் அந்த கிராம மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். முதல்முறையாக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற ரஜினிக்கு கிராம மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தான் பிறந்த ஊரான நாச்சிகுப்பத்திற்கு வருகை தந்த தலைவர் ரஜினிகாந்த்!!
அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் வழிபாடு!
ALWAYS TAMILAN BY BLOOD🩸🤘💪🏻#rajinikanth | #krishangiri | #Thalaivar#Jailer #Superstar @rajinikanth
— Rajini✰Followers (@RajiniFollowers) August 31, 2023