அச்சு அசலாக சினேகாவை போலவே இருக்காங்களே… sneha அண்ணன் மகளின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

அச்சு அசலாக சினேகாவை போலவே இருக்காங்களே… sneha அண்ணன் மகளின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். நடிகை சினேகாவிற்கு ஒரு சகோதரி இருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும், அதனைப் போலவே கோவிந்த நாயுடு என்ற அண்ணனும் இருக்கிறார்.

அவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலாவை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கத்தார் நாட்டில் செட்டிலானார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் கோவிந்த் இரண்டாவதாக சௌமியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் அக்ஷரா என்ற மகளும் இருக்கிறார்.தற்பொழுது சினேகா அண்ணன் மகளான அக்ஷரா தனது அண்ணனுக்கு ராக்கி காட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் பார்ப்பதற்கு நடிகை சினேகாவை போலவே இருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by SOWMYA GOVIND NAIDU (@sowmyagovind)