LATEST NEWS
‘ஒரு தலை ராகம்’ பட நடிகர் ஷங்கர் இப்ப எப்படி இருக்காருன்னு தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே…
ஒருதலை ராகம் இது இளையராஜா இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு இசை காவியம். இளையராஜா இல்லாமலும் ஒரு படத்தை வெற்றிப்படமாக எடுக்க முடியும் என்று அந்தக் காலகட்டத்தில் நிரூபித்த ஒரே பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தான். அதுமட்டுமல்லாமல் கஷ்டங்களை கூட கண்ணியமாக அதே நேரத்தில் காவியமாக எடுக்க முடியும் என்று நிரூபித்த படம் ஒரு தலை ராகம்.
சோகங்களை கூட காவியமாக காட்டியது இந்தப் படம். இத்திரைப்படத்தில் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் ஷங்கர். இவர் மலையாள சினிமாவில் பிரேம் நசீர் காலத்திற்கு பின்னர், மோகன்லால் காலத்திற்கு முன்பு இவர் முன்னணி நடிகராக இருந்தவர். கேரளாவில் பிறந்த இவருக்கு, நான்கு வயதான போது, இவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர், சினிமா நடிப்பு தொடர்பான படிப்பையும் முடித்தார்.
தமிழில் ஒரு தலை ராகம் படத்தில் முன்னணி வேடத்தில் இவர் நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் சுஜாதா, கோவில் புறா, மவுன யுத்ஹம் மற்றும் ராகம் தேடும் பல்லவி, காதல் எனும் நதியினிலே போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஒரு கால கட்டத்திற்கு பிறகு இவரின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் வெளியாகவில்லை. தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.