LATEST NEWS
ஜெயிலர் பட வில்லன் நடிகர் இப்படிப்பட்டவரா?… மாடல் அழகியையும் கூடவே அம்மாவையும் அதற்கு அழைத்ததை திமிராக ஒப்புக்கொண்ட விநாயகன்..!!

மலையாள திரை உலகில் 25 வருடங்களுக்கு மேலாக பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் விநாயகன். சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்துவார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தின் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷின் மரியான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் மலையாள படங்களில் அதிக அளவு நடித்துள்ள நிலையில் சுமார் 11 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாடல் அழகி மிருதுளா தேவி என்பவர் விநாயகன் மீது தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதாவது என்னையும் என்னுடைய அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார். பாலியல் ரீதியாக மிகவும் தொந்தரவு செய்வதாக கூறி புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் விநாயகன் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகின்றது