LATEST NEWS
நான் சமைப்பதில் இதுதான் என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகை அதிதி ஷங்கர் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.
அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கமிட்டாகி அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அதிதி சங்கர் அண்மையில் அளித்த பேட்டியில், நான் நன்றாக சமைப்பேன்,நான் போடும் ஆஃப் பாயில் என்னுடைய தந்தைக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் யார் இருந்தாலும் என்னை அழைக்கச் சொல்லி நான் போடும் ஆப் பாயிலை தான் அவர் சாப்பிடுவார். அதேசமயம் எனக்கு பிரியாணி மற்றும் ஸ்டப் முட்டை புர்ஜியும் நன்றாக செய்வேன் என்று அதிதி சங்கர் தெரிவித்துள்ளார்.