LATEST NEWS
‘உதிரிப்பூக்கள்’ பட நடிகை அஸ்வினியை ஞாபகம் இருக்கா?… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?…

இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஸ்வினி. அமைதி தவழும் நீள்வட்ட அழகிய முகம். சோகம் கலந்த மான்போன்ற விழிகளை உடையவர். தமிழ், கன்னடம், மலையாளம் என பன்மொழித்திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். தமிழ்ப்படங்கள் குறைவு தான்.
1958ல் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். படிப்பில் ஆர்வமிக்கவர். கலை ஆர்வத்தில் ஈடுபாடு உடையவர். மெட்ரிக் பள்ளியில் படித்த இவர் கணிதத்தில் புலி. பிஎஸ்சி. கெமிஸ்ட்ரி படித்து முடித்தார். கன்னடத்தில் முதலில் கால் பதித்தார். 1977ல் சித்தலிங்கய்யா இயக்கத்தில் ஹேமாவதி என்ற திரைப்படத்தில் நடித்தார். இதுதான் அவரது முதல் படம்.
இதைத்தொடர்ந்து இயக்குனர் மகேந்திரன் நடிகை அஸ்வினியை 1979ல் விஜயன், சரத்பாபு, சுந்தர், மதுமாலினி நடிப்பில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப்படத்தில் லட்சுமி என்ற லட்சுமிகரமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் அஸ்வினி. இது வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் 100 சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து 1980ல் கே.பாக்யராஜ் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு கை ஓசை படத்தில் அஸ்வினி நடித்தார். எம்எஸ்.வி.இசையில் முத்துத்தாரகை என்ற படத்தில் நடித்து அசத்தினார். அடுத்து 1981ல்மகேந்திரனின் இயக்கத்தில் நண்டு என்ற படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அஸ்வினி, திருமணம், குழந்தை என பெங்களூருவில் தற்பொழுது செட்டிலாகிவிட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த இவர், ‘தற்பொழுது அவரது மகளுக்கும் கல்யாணமாகி, ஒன்றரை வயதில் பேரன் இருக்கிறான் என்றும், அவருடைய கணவர் சமீபத்தில் இறந்ததாக குறிப்பிட்டார். மேலும், அவர் தற்பொழுது ‘ஈஸி ஈஸி மேத்ஸ்’ என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் ஐ.சி.எஸ்.ஈ., சி.பி.எஸ்.சி-யில் 7-வது மற்றும் 8-வது படிக்கும் பிள்ளைகளுக்கான மேத்ஸ் வீடியோஸ்களை அப்லோடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.