‘எதிர்நீச்சல்’ சீரியல் சக்தியின் நிஜ மனைவி இவங்க தானா?… பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே… - Cinefeeds
Connect with us

CINEMA

‘எதிர்நீச்சல்’ சீரியல் சக்தியின் நிஜ மனைவி இவங்க தானா?… பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே…

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று தான் எதிர்நீச்சல். திருச்செல்வன் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெண் அடிமை மற்றும் ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மக்களுக்கு சீரியல் எடுத்துக்காட்டி வருகின்றது. அதிலிருந்து வீட்டுப் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்ற விழிப்புணர்வை தான் இந்த சீரியல் மக்களுக்கு காட்டி வருகிறது.

இந்த சீரியலில் தற்பொழுது அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார். பின் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டு அது வேறொரு பிரச்சனையை இழுத்துள்ளது. இப்போது தனது மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்டவர் அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

ஈஸ்வரியை வெட்டிவிட முடிவு எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் கெத்தாக நுழைகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த தொடரில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக பேசி வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நடித்து வருபவர் சக்தி.

இவர் கதாபாத்திரம் பாசிட்டீவாக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் கார்த்திகா எனபவரை நீண்ட நாட்களாக காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.