காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள்… பதறிப்போன நடிகை ரஷ்மிகா… வைரலாகும் திருமண வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள்…  பதறிப்போன நடிகை ரஷ்மிகா… வைரலாகும் திருமண வீடியோ…

Published

on

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

தற்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். நடிப்பில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு. அந்தவகையில் தற்பொழுது இவர் தனது உதவியாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் திடீரேன நடிகை ரஷ்மிக்காவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…