பவுன்சர்களை மீறி விஜய் தேவர்கொண்டாவுடன் போட்டோ எடுக்க வந்த பெண் ரசிகை… அவர் என்ன செய்தார் தெரியுமா?… - Cinefeeds
Connect with us

CINEMA

பவுன்சர்களை மீறி விஜய் தேவர்கொண்டாவுடன் போட்டோ எடுக்க வந்த பெண் ரசிகை… அவர் என்ன செய்தார் தெரியுமா?… 

Published

on

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார்.

இவர் தற்போது சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில்  விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் ‘என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறி விரைவில் இது குறித்து அப்டேட் கொடுப்பேன்’ என பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவானது அவருடைய பெண் ரசிகைகளுக்கு மிகப்பெரிய சோகத்தையே கொடுத்தது என்று கூறலாம். தற்பொழுது நடிகர் விஜய் தேவர்கொண்டாவை  சந்தித்த பெண் ரசிகை ஒருவர், அவருடன் புகைப்படம் எடுக்க, பவுன்சர்களையும் மீறி பாய்ந்து விஜய் தேவர்கொண்டாவின் மீது வந்து விழுகிறார். இதைப்பார்த்த அவர் அந்த பெண் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by FilmiFriday ™ (@filmifriday)