ஃபோனை எடுக்காததால் வந்த கோபம்…விஷ்ணு விஷாலை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குநர்…மணிரத்னமா, ஷங்கரா நீங்க?” கோலிவுட் இயக்குநரின் திமிரை அடக்கிய விஷ்ணு விஷால்…இணையத்தில் தீயாய் பரவும் பதிலடி…! – cinefeeds
Connect with us

CINEMA

ஃபோனை எடுக்காததால் வந்த கோபம்…விஷ்ணு விஷாலை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குநர்…மணிரத்னமா, ஷங்கரா நீங்க?” கோலிவுட் இயக்குநரின் திமிரை அடக்கிய விஷ்ணு விஷால்…இணையத்தில் தீயாய் பரவும் பதிலடி…!

Published

on

தமிழ் திரையுலகில் திறமையான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், சமீபகாலமாகத் தனது படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். முன்னாள் காவல் துறை அதிகாரியின் மகனான இவருக்குத் தொடக்கத்தில் கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாகச் சினிமாவுக்குள் நுழைந்த அவர், ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் அறிமுகமாகிப் பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்தாலும், ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்கள் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன.

அதன் பின்னர் வெளியான சில படங்கள் சரிவர ஓடாததால், விஷ்ணு விஷாலின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் எனப் பலரும் விமர்சித்தனர். அந்தச் சமயத்தில்தான் ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்ததுடன், அவரை முன்னணி நடிகர்களின் வரிசையில் அமர வைத்தது. தொடர்ந்து வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படமும் மெகா ஹிட்டானது. தற்போது இந்த இரு படங்களின் இரண்டாம் பாகங்களும் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றன. குறிப்பாக, ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசரும், ‘சம்பவக்காரி’ என்ற முதல் பாடலும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.

Advertisement

இந்நிலையில், விஷ்ணு விஷால் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் பயங்கரமாகத் டிரெண்டாகி வருகிறது. அந்தப் பேட்டியில் தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “ஒரு இயக்குநர் எனக்கு ஃபோன் செய்து, எடுத்த உடனே ரொம்பவே திமிராகப் பேசினார். ‘நீங்கள் என்ன ரஜினியா, கமலா, சூர்யாவா? இரண்டு முறை ஃபோன் செய்தும் ஏன் எடுக்கவில்லை?’ எனக் கேட்டார். எனக்கு உடனே கோபம் வந்துவிட்டது. உடனே நானும் அவரிடம், ‘சார் நீங்கள் என்ன மணிரத்னமா, ஷங்கரா இல்லை கௌதம் மேனனா? நான் ஏன் உங்கள் ஃபோனை உடனே எடுக்க வேண்டும்?’ எனக் கேட்டுவிட்டேன். நான் எப்போதும் இப்படித்தான்” என்று அந்த இயக்குநரின் திமிருக்குத் தான் கொடுத்த பதிலடியை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in