“வாலிபால் விளையாட்டில் வெடித்த மோதல்…! வாலிபருக்குச் சரமாரி கத்திக்குத்து…” நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாலிபால் விளையாட்டில் வெடித்த மோதல்…! வாலிபருக்குச் சரமாரி கத்திக்குத்து…” நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

Published

on

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாலிபால் விளையாட்டுப் போட்டியின் போது, ராதாபுரத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவருக்கும் ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த பகையின் காரணமாக, நேற்று நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் ராதாபுரம் கருமாரப்பேட்டை பகுதிக்கு நேரில் வந்துள்ளார். அங்கிருந்த ராஜசேகரை வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல், ஆத்திரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

Advertisement

இக்கோரத் தாக்குதலில் உடலின் பல இடங்களில் பலத்த வெட்டுக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ராஜசேகரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த 2 நபர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இக்கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நவீன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in