LATEST NEWS
பகீர் நெஞ்சை பதறவைக்கும் காட்சி..! மின் கம்பத்தில் ஏறிய ராட்சச மலைப்பாம்பு.. பறவையை சாப்பிட சென்றபோது… உயர் அழுத்த கம்பியில் சிக்கி துடிதுடித்து பலி..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பு மின்சாரக் கம்பத்தில் ஏறி, உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளில் சிக்கிக் கொள்ளும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மின் கம்பியின் மீது ஏறிய பாம்பு, உயர் மின்னழுத்த கம்பி பட்ட உடனே பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://x.com/SUNILYADAV2027/status/2085749597146951779?s=20
இந்த எதிர்பாராத விபத்து காரணமாக, அந்தச் சுற்றியுள்ள பகுதிக்கான மின் விநியோகம் சிறிது நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டு முற்றிலும் பாதிக்கப்பட்டது. மின்சாரத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சாரத்தைத் துண்டித்து மலைப்பாம்பின் உடலை அப்புறப்படுத்திய பின்னரே அப்பகுதியில் மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.
