“உயிரை எடுக்காதே, காலை மட்டும் உடை…” மறுமணம் செய்து மகனை கேட்டு கூலிப்படையை ஏவிய மனைவி…. நடுரோட்டில் துடித்த கணவர்…. பகீர் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிரை எடுக்காதே, காலை மட்டும் உடை…” மறுமணம் செய்து மகனை கேட்டு கூலிப்படையை ஏவிய மனைவி…. நடுரோட்டில் துடித்த கணவர்…. பகீர் சம்பவம்…!!

Published

on

சென்னை தாம்பரம் அருகேயுள்ள வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவருடன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான வசந்தா (40) என்ற பெண், குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து சென்றார். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டு ஓரத்தூரில் வாழ்ந்து வந்த வசந்தா, தனது 11 வயது மகன் கவிதரனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கடந்த ஆண்டு தாமோதரனிடம் கேட்டுள்ளார்.

அதற்குத் தாமோதரன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொரியர் பார்சல் வந்திருப்பதாகக் கூறி தாமோதரனை வீட்டின் வெளியே வரவழைத்த மர்ம நபர்கள், இரும்பு பேஸ்பால் மட்டையால் அவரது காலைக் கொடூரமாக அடித்து உடைத்துவிட்டுத் தப்பினர்.

Advertisement

இக்கொடூரத் தாக்குதல் குறித்துப் பீர்க்கன்காரணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்துப் பரத் (19), அகஸ்டின் (19) ஆகிய இரு இளைஞர்களை இரு மாதங்களுக்குப் பிறகு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்மணி (32) என்ற ரவுடி மூலம், கணவனின் கால்களை மட்டும் உடைப்பதற்காக அவரிடம் வசந்தா ரூ.4 லட்சம் பேரம் பேசி, ரூ.3.5 லட்சம் முன்பணம் கொடுத்துக் கூலிப்படையை ஏவியது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து வசந்தா மற்றும் ரவுடி பொன்மணி ஆகியோரை போலீசார் அதிரடியாகக் கைது செய்த நிலையில், தாமோதரன் கூலிப்படையினரால் தாக்கப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி   காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in