‘காதல் ஓவியம்’ படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா?… இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க… - Cinefeeds
Connect with us

CINEMA

‘காதல் ஓவியம்’ படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா?… இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க…

Published

on

தமிழ் சினிமாவில் காலத்தால் என்றும் அழியாத படமாக ஒரு சில படங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்த படமாக காதல் ஓவியம் படத்தை சொல்லலாம். தோல்வியை தழுவிய படமாக இருந்தாலும் அந்தப் படத்தில் காதலின் ஆழத்தை மிக உருக்கமாக காட்டியிருப்பார் பாரதிராஜா.

1982 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் புதுமுக நடிகர் கண்ணன் என்ற சுனில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். கூடவே கவுண்டமணி, ராதாரவி, ஜனகராஜ் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வெளியான படமாக காதல் ஓவியம் படம் அமைந்தது. இதில் கதாநாயகனாக நடித்த கண்ணன் கண் பார்வை தெரியாதவர் போல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு கதநாயகர்தான் காரணம் என்று அன்றைய விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர் ஒரு படம் மட்டுமே நடித்தார். தற்போது இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். இதில் அவர் இயற்பெயர் சுனில் கிருபளானி என்று தெரிவித்துள்ளார். மேலும் இவரது குடும்பம் 1947ல், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர் என்று தெரிவித்துள்ளார். பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடியதாகவும், அப்போதுதான் காதல் ஓவியம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறினார்.

மேலும் அந்த படத்தின் தோல்வியால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டதாவும் கூறியுள்ளார். தற்போது அவருக்கு 60வயதாகிறது. மேலும் அவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரின் சமீபத்திய புகைப்படம்…