LATEST NEWS
வித்தியாசமாக செல்ல குழந்தைக்கு பெயர் வைத்த இலியானா… என்ன பெயர் தெரியுமா?.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளார். கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இருந்தாலும் அவரின் காதலர் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில் சமீபத்தில் இலியானாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து இலியானா இன்ஸ்டாவில், “ எங்கள் அன்பான மகனை, இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது” என்று கூறி தங்களது மகனின் பெயர் Koa Phoenix Dolan என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க