தாயின் இறப்பால் தற்கொலைக்கு தயாரான நடிகை கல்யாணி… அவரே கூறிய மனதை கலங்கடிக்கும் தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

தாயின் இறப்பால் தற்கொலைக்கு தயாரான நடிகை கல்யாணி… அவரே கூறிய மனதை கலங்கடிக்கும் தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தூள் கிளப்பியவர் நடிகை கல்யாணி. இவர் நடிகை என்பதையும் தாண்டி தொகுப்பாளராகவும் கலக்கி வந்தார். ‘பீச் கேர்ள்ஸ்’ என்ற நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ‘தாயுமானவன்’ சீரியலில் ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையில் கலக்கியவர். இவர் 300-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை கல்யாணி. பின்னர் 2014ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவருக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். இந்நிலையில், விஜே கல்யாணி தன் அம்மா குறித்து கூறிய தகவல்கள் ரசிகர்களை கலங்கடித்துள்ளது. அப்பேட்டியில் அவர் கூறியதாவது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என் வாழ்க்கையில் இரண்டு ஆன்மாவை இழந்தேன்.

அது என் வாழ்வில் மிகவும் பயங்கரமான நாளாக மாறியது. அன்று தான்  என் அம்மா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்போது எனக்கு 23 வயது தான். அந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது. பிறகு தான் நானும் வாழ்க்கை மீது ஆசையில்லாமல் தற்கொலைக்கு முயன்றேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவலை அறிந்த ரசிகர்கள் உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா? என்று கமெண்ட் செய்தும், ஆறுதல் கூறியும் வருகின்றனர்.