LATEST NEWS
இந்த புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் 90s நடிகை யார் தெரியுமா?… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.
இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ பதவி வகித்து வருகிறார்.
அரசியலில் ஆக்டிவாக இருப்பதைப் போலவே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் குஷ்புவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
