திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது பாவனி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் கையில் போடப்பட்ட கிரிப்ஸ் பேண்டேஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆனது என கேட்டு வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in