LATEST NEWS
கணவரின் மறைவிலிருந்து மீண்டு வரும் நடிகை மீனா… பாரிஸ் ஈபிள் டவர் முன் எடுத்த மாஸ் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா. ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
தனது குடும்ப வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா.
தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடிக்கும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியானது . இதைத்தொடர்ந்து இவருக்கு’ மீனா 40′ என்ற விழா கூட சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகை மீனா பரிசிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram