டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மிருணாளினி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தியாகராஜா குமரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரை நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினியாகவும் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. அதன்படி பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அசத்தினார்.

அதேசமயம் ஜாங்கோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது எனிமி என்ற திரைப்படம் மூலம் தான்.

அந்த திரைப்படம் அவ்வளவு பெரிதாக வெற்றியடையாவிட்டாலும் அதில் இடம்பெறும் டம் டம் என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனதற்கு இவரின் நடனம் முக்கிய காரணம். அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இவ்வாறு பிஸியான நடிகையாக இருக்கும் இவர் அடிக்கடி இணையத்திலும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

தற்போது இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

பொதுவாகவே மாலத்தீவு சுற்றுலா செல்லும் நடிகைகள் பலரும் விதவிதமான போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்வது வழக்கம்.

அதன்படி இவரும் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.