#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம்  வந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் குணசத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

அவ்வகையில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தினார் .

அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு தெலுங்கு திரை உலகம் பக்கம் சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவேதா தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

தற்போது நிவேதா தாமஸின் க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nivetha Thomas 9
29013e4572577f7be460823cbe33781b
nivetha thomas no makeup 1