‘எங்களுக்கு குழந்தை பிறந்திடுச்சு’… மகிழ்ச்சியுடன் ‘தாலாட்டு’ சீரியல் நடிகை வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்துக்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

 ‘எங்களுக்கு குழந்தை பிறந்திடுச்சு’… மகிழ்ச்சியுடன் ‘தாலாட்டு’ சீரியல் நடிகை வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்துக்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சஹானா. இவரின் நடிப்புக்கென்று பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் சன் டிவியில் மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் பல சீரியல்களிலும் நடித்து  பிரபலமானவர்.

பகல் நிலவு, அழகு என பல சீரியல்களில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா. சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்பொழுது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

இவரது வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர்கள் கூட்டம் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் மருத்துவர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும் இதைத்தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சஹானாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சீரியல் நடிகை சஹானாவுக்கு குழந்தை தற்பொழுது பிறந்துள்ளது. இவர்கள் தற்பொழுது ‘எங்களுக்கு குழந்தை பிறந்திடுச்சு’ என்று கூறி இச்செய்தியினை இணையத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sahana A (@actresssahanaa)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in