LATEST NEWS
சினிமாவில் ‘நடிகையாகவும்’ ‘பாடகியாகவும்’ கலக்கி வரும் நடிகைகள் யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் நடிகை மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் உள்ளனர் . அப்படிபாடகியாக வலம் வரும் நடிகைகளை பற்றி இதில் காண்போம்.
1.சுருதி ஹாசன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சுருதி ஹாசன். இவர் தேவர் மகன், சச்சின் 420, வாரணம் ஆயிரம், 3, ஏழாம் அறிவு, வேதாளம், இது நம்ம ஆளு போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.
2.ஆண்ட்ரியா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் அன்னியன், வேட்டையாடு விளையாடு, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், மன்மத அன்பு, தாதா, மெரினா போன்ற படங்களில் பாடியுள்ளார்.
3. ரம்யா:
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா. இவர் பாண்டிய நாடு, சகாப்தம், சகலகலாவல்லவன், முன்னோடி போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.
4.மம்தா மோகன்:
பிரபல முன்னணி நடிகைகளின் ஒருவர் நடிகை மம்தா மோகன்தாஸ் . இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் பாடியுள்ளார். இவர் தெலுங்கில் வெளியான ‘ராக்கி’ திரைப்படத்தில் பாடல்களை படி தெலுங்கு திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.
5.ராஷி கண்ணன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷி கண்ணன் . இவர் மனம் இமைக்கா நொடிகள் அடங்கமறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் பாடியுள்ளார்.
6.நித்யா மேனன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நித்யா மேனன். இவர் மாலினி 22 என்ற தமிழ் திரைப்படத்தில் பாடியுள்ளார். இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழி படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
7.வசுந்தரா தாஸ்:
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர் முதல்வன், ரிதம், குஷி, பாய்ஸ் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.
