LATEST NEWS
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி திடீர் ரத்து… காரணம் என்ன?… அவரே வெளியிட்ட பதிவு..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் மழை காரணமாகவும் மைதானத்தில் நீர் தேங்கியாலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாகனங்கள் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஏ ஆர் ரகுமான் தனது twitter பக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
My Dearest Friends …Owing to adverse weather conditions and persistent rains, it is only made advisable for the health and safety of my beloved fans and friends to reschedule the concert to the nearest best date, with the guidance of the statutory authorities.
More details on… pic.twitter.com/HRAyqo5y0n— A.R.Rahman (@arrahman) August 12, 2023