LATEST NEWS
பிக்பாஸ் டைட்டிலை வென்ற பிறகு அசீம் வெளியிட்ட முதல் பதிவு…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவர்களில் அசீம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய அசீம், சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் டிராஃபியுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 11 நாமினேஷன் ஒரு டிராபி என்று முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்த பலரும் நீங்கள் இதற்கு தகுதியானவர் தான் என்று கூறினாலும் மறுபக்கம் சிலர் இது ஓவராக தெரியவில்லையா என்று திட்டியும் வருகிறார்கள். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
