CINEMA
வீடு களைகட்டும் போலயே…. ஜோடி ஜோடியா இறங்கப்போறாங்களா…? பிக்பாஸ்-8இன் புதிய லிஸ்ட்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது . அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் புதுப்பட்டியில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பிரபலங்கள் என்னடா ஜோடி ஜோடியா இருக்கு… அப்போ இந்த சீசன் களைக்கட்டும் போலையே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.