CINEMA
ஏன் இப்படி பம்முற…?விஜய்யின் நண்பர் என்கிட்ட வந்து அப்படி சொன்னார்…. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், விஜயின் நண்பர் சஞ்சீவை நான் சார் என்று தான் அழைப்பேன்.
அவரைப் பார்த்தால் மட்டும் ஏன் இப்படி பம்முற என்று அவருடைய மனைவி பிரீத்தி கேட்பார். ஒரு முறை நான் உடல் இழைத்து விட்டேன். அப்பொழுது சஞ்சு என்னை சந்தித்தார். அந்த சமயத்தில் என்னிடம் ஏன் நீ இப்படி ஒல்லி ஆகிட்ட. இப்படி ஆக சொல்லி உன்னிடம் யார் சொன்னது என்று உரிமையோடு கேட்டார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.