எங்க அம்மா, அப்பாவை இந்த படத்தை பார்க்க கூடாதுனு சொல்லிட்டேன்…. மாரி செல்வராஜ் உருக்கம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

எங்க அம்மா, அப்பாவை இந்த படத்தை பார்க்க கூடாதுனு சொல்லிட்டேன்…. மாரி செல்வராஜ் உருக்கம்…!!

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் Pre Release நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தை firstuh எங்க அம்மா அப்பாவை பாக்க கூடாதுனு சொல்லிட்டேன். அப்படியென்றால் இந்த படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கோங்க. இந்த படம் எடுத்திருக்க கூடாதுனு நினைக்கக்கூடிய படம். என்னுடைய இயக்குனர் ராமிற்கு தான் நன்றி சொல்வேன். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனை விட இந்த படம் எடிட்டிங்கில் போது நான் அழுது விட்டேன்.  வாழை படத்திற்கு பேஸ்ட்டாக படம் பண்ணுவேன். ஆனால் என்னுடைய உட்சபட்ச கண்ணீராக வாழை தான் இருக்கும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement