CINEMA
மிரட்டும் அழகில் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா…. எந்த படத்துக்கு இப்படியொரு ஸ்டில்…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா கடந்த 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்ட ராஜா ராணி 2 சீரியல் நடிகை நடித்து வந்தவர். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் அறிமுகம் கிடைத்த நிலையில் இதில் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார். ஆனால் தன்னுடைய விலகல் குறித்து இவர் எந்த ஒரு காரணமும் கொடுக்கவில்லை.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற இவர் சாம்பியன் பட்டம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.