LATEST NEWS
பிரம்மாண்டமாக நடைபெற்ற காமெடி நடிகர் பிரம்மானந்தாவின் இளைய மகன் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிரம்மானந்தம். இவர் தமிழில் மொழி, பயணம், வானம், தோனி மற்றும் அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் தமிழ் சினிமாவை விட பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த பல திரைப்படங்களில் இவரின் காமெடி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவருக்கு திருமணம் ஆகி கௌதம் மற்றும் சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான கௌதம் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகராக வரவில்லை.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோத்ஸ்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரம்மானந்தாவின் இளைய மகன் சித்தார்த் திருமணம் நேற்று நடைபெற்றது.
ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்த மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டில் படித்த தற்போது அங்கு பணியாற்றும் சித்தார்த் மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவரின் திருமணத்தில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சிறப்பு விருந்தினர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல்வர் கேசிஆர், ஒளிப்பதிவு அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நந்தமுரி பாலகிருஷ்ணா, மஞ்சு மோகன் பாபு, முரளி மோகன், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மற்றும் மருமகள் விரானிகா, ராஜேந்திர பிரசாத், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதா, ராம் சரண் மற்றும் உபாசனா போன்ற தெலுங்கு திரையுலகின் குறிப்பிடத்தக்க பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, சுஷ்மிதா கொனிடேலா, ஸ்ரீகாந்த் குடும்பத்தினர், சாய் குமார் குடும்பத்தினர், மஞ்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி மற்றும் பல பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது பிரம்மானந்தம் இளைய மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
