LATEST NEWS
“சினிமாவில் என்னை கவனம் ஈர்த்த நடிகர் இவர்தான்”.. சொல்ல வார்த்தையே இல்லை… பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய நடிகை கங்கனா ரணாவத்..!!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் கங்கனா ரணாவத். இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த இவர் பல வருடங்கள் கழித்து ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ஜான் ஆபிரகாம் தன்னை கவர்ந்த நடிகர் என்று கங்கனா ரணாவத் பாராட்டியுள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் மோசமான நடிகர்கள் குறித்து பேசி உள்ளேன். இவர்களில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு நல்ல நடிகர் தான் ஜான் ஆபிரகாம். இவருடன் படத்தில் பணியாற்றியுள்ளேன். இவர் எந்த அளவிற்கு நல்லவர் என்று சொல்ல என்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை. தன்னை பற்றி புகழ்ந்து பேசுவதற்கு ஜான் ஆபிரகாம் யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார்.
இவர் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருந்தாலும் எந்த பெண்ணுடனும் இதுவரை தொடர்பில் இல்லை. மற்றவர்களைப் பற்றி எப்போதும் தவறாக பேச மாட்டார். பெண்களை எப்போதும் துன்புறுத்த மாட்டார். ஜான் ஆபிரகாம் ஒரு அற்புதமான மனிதர். அவர் தன்னுடைய சொந்த முயற்சியில் தான் முன்னேறினார் என்று மிகவும் பெருமையாக கங்கணா ரணாவத் பேசியுள்ளார்.