FLASH: எல்லாம் சரியா இருக்கா.? சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: எல்லாம் சரியா இருக்கா.? சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு…!!

Published

on

சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அங்கிருந்த மாணவர்கள் தங்களின் நீண்ட நாள் குறைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவித்தனர். விடுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அன்றாடம் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறினர். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நாட்களில் மட்டுமே தரமான உணவு வழங்கப்படுவதாகவும், மற்ற நாட்களில் தரம் குறைவாகவே இருப்பதாகவும் முதலமைச்சரிடம் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

உணவு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் மட்டுமன்றி, விடுதி வார்டன்கள் தங்களை நடத்தும் விதம் குறித்தும் மாணவர்கள் கவலை தெரிவித்தனர். வார்டன்கள் தங்களை இழிவாகவும், மரியாதையின்றியும் பேசுவதாக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட்டனர். மாணவர்களின் அனைத்துப் புகார்களையும் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், இந்த அடுக்கடுக்கான புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in