LATEST NEWS
BREAKING: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் திடீர் ரத்து.. வெளியான பரபரப்பு தகவல்..!!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கேரளா பயணம் கனமழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டருக்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் நடைபெற்ற ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத் திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு அவர் கேரளா புறப்படத் திட்டமிட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு மற்றும் வானிலை எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்டப் பயணம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
