LATEST NEWS
விவசாயிகளுக்குப் பம்பர் ஆஃபர்.. கூட்டுறவுத் துறை அறிவித்த ரூ.5 லட்சம் கடன்.. வாங்குவது எப்படி..? முழு விபரம் இதோ..!!
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதற்காகப் பொதுமக்களுக்கு ரூ.5,000 கோடி வரை கடன் வழங்கத் தமிழகக் கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்குத் தங்களின் விவசாயத் தேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் தொகையை 36 மாதங்களுக்குள் வட்டியுடன் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை நிபந்தனை விதித்துள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம் தமிழக விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
