₹5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட சிறுவன்… 7 பேர் கொண்ட ‘குழந்தை திருடும் கும்பல்’ பிடிபட்டது எப்படி? பின்னணியில் இருந்த பெண் மாஸ்டர்மைண்ட் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

₹5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட சிறுவன்… 7 பேர் கொண்ட ‘குழந்தை திருடும் கும்பல்’ பிடிபட்டது எப்படி? பின்னணியில் இருந்த பெண் மாஸ்டர்மைண்ட் அம்பலம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுவனைக் கடத்தி, 5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற பயங்கரக் கும்பலை அதிரடி என்கவுண்டர் மூலம் காவல் துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 13 அன்று காஸ்னா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டான். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் எலக்ட்ரானிக் கண்காணிப்பு உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தக் கடத்தல் நாடகத்தின் பின்னணியில் ‘மாமி-மருமகன்’ கூட்டணி மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புஷ்பா என்ற பெண், டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு குழந்தையை விற்க 5 லட்ச ரூபாய் ஒப்பந்தம் பேசி, முன்பணமாக 2 லட்ச ரூபாயும் வாங்கியுள்ளார். புஷ்பாவின் தூண்டுதலின் பேரில் அவரது மருமகன் சுமித் மற்றும் அவனது கூட்டாளிகள் இணைந்து இக்கொடூரக் கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.

Advertisement

சந்தேகத்திற்குரிய கடத்தல்காரர்களின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் நடத்திய அதிரடித் துப்பாக்கிச் சூட்டில் குர்மீத் சிங், சுமித் குமார், அங்கித் குமார் ஆகிய 3 கடத்தல்காரர்களின் கால்களில் தோட்டாக்கள் பாய்ந்தன. தப்பியோடிய கும்பலை சுற்றி வளைத்த போலீசார், 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரைக் கைது செய்து, கடத்தப்பட்ட 6 வயது சிறுவனை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in