CINEMA
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த இயக்குனர் அட்லி…. வெளியான அழகிய புகைப்படம்…!!
நடிகர் விஜயின் நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் தான் அட்லி .இவர் நடிகர் விஜய்யின் நட்பை இந்த படத்தின் மூலமாக பெற்றார் . அதன் பிறகு ராஜா ராணி படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை பதித்தார். அதனை தொடர்ந்து தெறி படத்தை எடுத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது 150 கோடி வசூல் செய்த விஜயின் முதல் திரைப்படமும் இதுவே.
இதன்பிறகு இருவரும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தால் தன்னுடைய கடைசி படம் தளபதி 69 தான் என்று அறிவித்துவிட்டார் .இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.