கோடிக்கணக்கான பணம் சர்வ சாதாரணமாக புழங்கும் துறைகளில் பிரதானமான ஒன்றுதான் சினிமாத்துறை. ஆயிரக்கணக்கில் டேட்டா வாங்கி கொண்டிருந்த நடிகர்கள் சினிமாவில் கிடைத்த மக்கள் செல்வாக்கின் மூலமாக தற்போது கோடிக்கணக்கில் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தில் உள்ளனர்.

அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி வரை பல முன்னணி நடிகர்களை உதாரணமாக கூறலாம். அவ்வகையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில் பத்தாவது இடத்தில் இருப்பது விஜய் சேதுபதி. துணை கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் நுழைந்த இவர் டாப் நடிகராக தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நாயகனாக நடிக்க கூடிய படங்களுக்கு அதிகபட்சமாக 15 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நண்பர்களுக்காக இலவசமாகவும் அதுவே ஒரு சில படங்களில் மூன்று கோடி வரை சம்பளமாகவும் பெற்று வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் கூட பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படம் வரை குறைந்த அளவு சம்பளம் பெற்று வந்த சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருப்பது நடிகர் விக்ரம். ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலையான ஒரு வெற்றி திரைப்படத்தில் நடிப்பதற்கு போராடிக் கொண்டிருந்த இவர் கோப்ரா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் சம்பளம் இன்னும் குறையாமல் அப்படியே 15 கோடியில் உள்ளது.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய உச்சத்தை தொடவில்லை என்றாலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்பொழுது 25 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று டாப் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது. இவர் ஒரு திரைப்படத்திற்கு 30 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளிலும் நடத்தி வருகிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் சூர்யா. இவர் சில வருடங்களாக பெரிய வெற்றி படங்கள் எதுவும் கொடுக்காமல் இருந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இதில் சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை குவித்தது. இவர் அடுத்ததாக வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பல வேலைகளை செய்வதால் இவரின் சம்பளத்தை கணிக்கவே முடியாது. இவர் நடிகராக நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி வரை சம்பளம் பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவர் தயாரிக்க கூடிய படங்களில் அவருக்கு சம்பளமாக 80 கோடி வரை நிர்ணயித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் அஜித். இவர் பெரும்பாலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பாளருக்கு ஒப்புதல் கொடுப்பதால் இவரின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இவர் இறுதியாக வெளியான துணிவு திரைப்படத்தில் 105 கோடி வரை சம்பளம் பெற்று இருந்தார். அடுத்ததாக ஏகே 62 படத்தில் இவரின் சம்பளம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் ரஜினி. இவர் ஒரு திரைப்படத்திற்கு 110 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருப்பது நடிகர் விஜய். இவர் ஒரு திரைப்படத்திற்கு 120 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.