சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வர இணையத்தில் பல விளம்பரங்களையும் செய்து வருகிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி அடிக்கடி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது இவர்களின் வீட்டின் ஒரு ஸ்பெஷல் பூஜை நடைபெற்றது. அதாவது சண்டி ஹோமம் நடைபெற்று உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு அனைவரும் நலம் பெற இந்த பூஜை என பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)