CINEMA
வனவிலங்குகளை காப்பாற்றுவதற்கான முயற்சியில் நடிகர் சின்னி ஜெயந்த்… என்ன செய்தார் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி பன்முகத்திறமையாளராக அறியப்படுபவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் தன்னுடைய காமெடியினால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் குணசேத்திர வேடத்திலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
தற்பொழுது இவருடைய மகன் சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியுள்ளார். திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் வனவிலங்குகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இவர் அடிபட்ட கிளி ஒன்றிற்கு சிகிச்சை அளித்து வனக்காவலர்களுடன் இணைந்து அந்த கிளியை சுதந்திரமாக பறக்க விட்டுள்ளார். மேலும், மக்களும் இதுபோல விலங்குகள், பறவைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதோ அவரின் வைரல் வீடியோ….
View this post on Instagram