LATEST NEWS
இன்று 130 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் கமலஹாசனின் முதல் பட சம்பளம் இவ்வளவு தானா?… ஷாக் ஆகாம பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன்.
இதைத்தொடர்ந்து அவர் பல திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோவும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதில் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கும் கமல் ஹாசன் அப்படத்தில் நடிக்க ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறி வருகின்றனர்.
தற்பொழுது நடிகர் கமலஹாசன் இன்று ஒரு படத்தில் நடிக்க ரூ. 130 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் , தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தெரிந்தால் நாம் அனைவரும் ஷாக்காகி விடுவோம். ஆம். நடிகர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல் ரூ. 500 சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதுதான் அவருடைய முதல் சம்பளம் என்றும் தெரிவிக்கின்றனர்.