LATEST NEWS
டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவில் நடித்து அசத்திக் கொண்டிருக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா..?
1.அதிதிசங்கர்:
இயக்குனர் எம் முத்தையா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் விருமான் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அதிதிசங்கர். இதனை தொடர்ந்து மாவீரன் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் எடுக்கப்படும் ஒரு படத்தில் ஹீரோயினியாக நடிக்கிறார். இவர் தன் அப்பாவிற்காக டாக்டர் படிப்பை முடித்துவிட்டு. தன் ஆசைக்காக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
2.சிவானி ராஜசேகர்:
இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பறிவு’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சிவானி ராஜசேகர். இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங்கம் கூட. இவருடைய அப்பா தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்.அதன் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டார்.இவர் படித்தது டாக்டர் அதை விட்டுட்டு மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வத்தை காட்டி வருகிறார்.
3.மானுஷி சில்லர்:
நடிகை மானுஷி சில்லர் மாடலிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.அதன் பிறகு உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்றார். 2022 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘சாம்ராஜ் பிருதிவிராஜ்’ படத்தில் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்து வருகிறார். ஆனால் இவர் படித்தது (DRDO) ஒரு மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார்.
4.சாய் பல்லவி:
நடிகர் தனுஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மாரி 2 .இப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் இவர் படித்தது டாக்டர் ஆனால் அதை மறந்து விட்டு நடிப்பு ,நடனம் என்று அதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
5.தனன்யா:
இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம்’குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தனன்யா. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் படித்தது டாக்டர் ஆனால் அதை விட்டு தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
6.ஷர்மிளா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஷர்மிளா. இவர் படிக்காதவன், கல்யாண சமையல் சாதம்,ஒன்னமான்,காதலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சின்னதிரை சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் படித்தது டாக்டர் ஆனால் அதை விட்டு தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
